Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

திருமருகல் அருகே மின்வெட்டைக் கண்டித்து தீப்பந்தம் ஏந்தி ஊர்வலம்

திருமருகல் அருகே மின்வெட்டைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் தீப்பந்தம் ஏந்தி ஊர்வலம் நடத்தினர்.

தமிழகத்தில் நிலவும் தொடர் மின்வெட்டைக் கண்டித்தும், டெங்கு காய்ச்சல் நோய் பரவாமல் தடுக்க வலியுறுத்தியும் திருமருகல் ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் தீப்பந்தம் ஏந்தி ஊர்வலம் நடைபெற்றது.

ஊர்வலத்திற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் அமிர்தலிங்கம் தலைமை தாங்கினார். திருமருகல் ஒன்றிய செயலாளர் பி.டி.பகு, தொழிற்சங்க ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முன்னதாக நடுக்கடையில் இருந்து ஊர்வலம் புறப்பட்டது. திட்டச்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் வழியாகச் சென்ற ஊர்வலம் முடிவில் ப.கொந்தகையில் நிறைவடைந்தது. கட்சி நிர்வாகிகள் ராமச்சந்திரன், கண்ணபுரதாசன், ராஜஇரணியன், நீலமேகம், பாலு, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
[vuukle-powerbar-top]

Recent Post