Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

சிவசேனா கட்சித் தலைவர் பால் தாக்ரே மும்பையில் காலமானார்



சிவசேனா கட்சித் தலைவர் பால் தாக்ரே மும்பையில் காலமானார். கடந்த ஒரு மாத காலமாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்த பால்தாக்ரே சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். தாக்ரேவிற்கு சில நாட்களாக செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்தது. சிகிச்சை பலனின்றி இன்று பிற்பகல் 3.33 மணிக்கு, மாரடைப்பால்  பால்தாக்ரே உயிர் பிரிந்தது. இதனையடுத்து சிவசேனா கட்சியின் முக்கிய தலைவர்கள் தாக்ரே இல்லத்தில் குவிந்துள்ளதால் மும்பையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து சிவசேனா கட்சியின் முக்கிய தலைவர்கள் தாக்ரே இல்லத்தில் குவிந்துள்ளதால் மும்பையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

பால்தாக்ரே மறைவையடுத்து மும்பை நகரில் 20000 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். தாக்ரே வீடு உள்ள பகுதியில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மும்பையில் ரயில் நிலையங்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. 


பால்தாக்ரேவின் இறுதி சடங்கு நாளை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை காலை 10 மணிக்கு பால்தாக்ரேவின் இறுதி ஊர்வலம் புறப்படும் என்றும், நாளை பிற்பகல் 3 மணிக்கு பால்தாக்ரேவின் உடல் தகனம் செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.  

பால்தாக்ரே விற்கு வயது 86
[vuukle-powerbar-top]

Recent Post