Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

வடக்கிற்கு வழங்கிய நிதியின் பெரும்பகுதியை வடமத்திய மாகாணத்துக்கு ஒதுக்கியது இலங்கை

போரினால் பாதிக்கப்பட்ட வடக்குப் பகுதியில் வீதிகளை அபிவிருத்தி செய்வதற்கு, ஆசிய அபிவிருத்தி வங்கி இலங்கைக்கு மேலதிகமாக 98 மில்லியன் டொலரை கடனாக வழங்கியுள்ளது. 

எனினும், வடக்கிற்காக வழங்கப்பட்டுள்ள இந்த நிதியின் பெரும்பகுதி வடமத்திய மாகாண வீதிகளை அபிவிருத்தி செய்வதற்கே இலங்கை செலவிடவுள்ளது. 

ஆசிய அபிவிருத்தி வங்கியின் இந்த நிதியைக் கொண்டு ஏனைய மாகாணங்களுடன் வடக்கை இணைக்கும் 200 கி.மீ நீளமான 19 வீதிகளை அபிவிருத்தி செய்யவுள்ளதாக இலங்கை நிதி அமைச்சு கூறியுள்ளது. 

இந்தத் திட்டத்தின் கீழ், வடக்கு மற்றும் வடமத்திய மாகாணத்தில் 80 கி.மீ தேசிய நெடுஞ்சாலையும், மேலும் வடக்கில் 50 கி.மீ நீளமடையதும், வடமத்திய மாகாணத்தில் 70 கி.மீ நீளமுடையதுமான மாகாண நெடுஞ்சாலைகளும், குறிப்பிட்ட பாலங்களும் புனரமைக்கப்படவுள்ளன.
[vuukle-powerbar-top]

Recent Post