Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

சிவ கார்த்திகேயனை கவர்ந்த விஜய், அஜித் படங்கள்.


அண்மையில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட சிவ கார்த்திகேயனிடம் அந்நிகழ்ச்சி தொகுப்பாளர் நடிகர்கள் விஜய் மற்றும் அஜித்தின் படங்களில் உங்களுக்கு பிடித்த படம் எது என்ற கேள்வியை முன் வைத்தார்.

இதற்கு பதிலளித்த சிவ கார்த்திகேயன்,இருவரது படங்களும் தனக்கு மிகவும் பிடிக்கும் என்றும்,அவர்களுடைய ஆளுமையை எண்ணி தான் மிக வியப்பதாகவும் தெரிவித்தார்.

விஜய் நடித்த படங்களில் தனக்கு மிக பிடித்த படம்  "போக்கிரி"என்றும்,அப்படத்தில் விஜய் மிக இயல்பாக நடித்திருப்பதாகவும்,அவருடைய தோற்றம் அப்படத்தின் கதாபாத்திரத்திற்கு மிக பொருத்தமானதாக அமைந்திருந்ததாகவும் தெரிவித்தார்.

அஜித் நடித்த படங்களில் தனக்கு பிடித்த படம் "தீனா" என்றும், அப்படத்திற்கு பின்னரே இரசிகர்களால் அஜித் "தல" என்று செல்லமாக அழைக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

தற்போது "எதிர் நீச்சல்" என்ற படத்தில் நாயகனாக நடித்துக் கொண்டுள்ளார் சிவ கார்த்திகேயன். பிரியா ஆனந்த் மற்றும் "அட்டகத்தி"நந்திதா ஆகியோர் இவருக்கு ஜோடியாக இப்படத்தில்  நடித்து கொண்டுள்ளனர்.தனுஷின் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார் அனிருத்.

[vuukle-powerbar-top]

Recent Post