Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

கடலூர் சிப்காட்டில் உள்ள ரசாயன தொழிற்சாலையில் தீ விபத்து

கடலூர் மாவட்டம் சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள ஒரு தனியார் ரசாயன கொதிகலன் ஒன்று இன்று வெடித்து தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

தீயை தொடர்ந்து அப்பகுதியில் புகை மூட்டமாக காட்சியளிக்கிறது. மேலும், மாவட்ட நிர்வாகம் தொழிற்சாலை அருகே உள்ள மக்களை வெளியேற்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

தீயை அணைக்கும் பணியின் போது மற்றொரு கொதிகலனும் வெடித்துள்ளது. தீ தொடர்ந்து அப்பகுதியில் உள்ள மற்றொரு தொழிற்சாலைக்கும் பரவியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன, தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க தொடர்ந்து போராடி வருகின்றனர்.
[vuukle-powerbar-top]

Recent Post