Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு ஆதரவு இல்லை - சீத்தாராம் யெச்சூரி

மத்தியில் ஆட்சி ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு எதிராகத் திரிணாமூல் காங்கிரஸ் கொண்டுவரும் நம்பி்க்கை இல்லாத தீர்மானத்தை மார்க்சிஸ்ட் கட்சி ஆதரிக்காது என அக்கட்சியின் மூத்த தலைவர் சீத்தாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார்.

அந்தத் தீர்மானம் ஒரு வேளை தோற்கடிக்கப்பட்டால், மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளுக்கு அங்கீகாரம் கிடைத்தததாக ஆகிவிடும் எனவும் அவர் கூறியுள்ளார். அதே நேரத்தில், சில்லரை வணிகத்தில் அந்நிய நேரடி முதலீடு உள்ளிட்ட மத்திய அரசின் தவறான கொள்கைகளுக்கு எதிராக, இடதுசாரிகள் சார்பில் நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டுவரப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளைத் தோற்கடிக்கக் கூடிய உறுதியான முயற்சிகளை எடுக்க வேண்டும் என்பதே மார்க்சிஸ்ட் கட்சியின் நோக்கம் என்றும் சீதாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார்.
[vuukle-powerbar-top]

Recent Post