Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

தமிழ்ப் பெண்களின் ஆட்சேர்ப்பு சட்டரீதியானதல்ல – நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன்

புனர்வாழ்வு அளிக்கப்பட்ட முன்னாள் பெண் போராளிகள் இலங்கை
இராணுவத்தில் சட்டவிரோதமாக இணைக்கப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்ன் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். 

“இந்த ஆட்சேர்ப்பு மோசமான கவலையளிக்கும் ஒரு விவகாரம். 

இது தொடர்பான உரிய வர்த்தமானி அறிவித்தல் ஏதும் முறைப்படி வெளியிடப்படவில்லை. 

இந்த ஆட்சேர்ப்பு சட்டவிரோதமாகவே மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

இலங்கையின் வடக்கு இராணுவத் தளபதி வீடுவீடாகச் சென்று, கட்டாயப்படுத்தி பெண்களை இராணுவத்தில் சேர்த்துள்ளார். 

இந்தப் பெண்களுக்கு எந்தவொரு இராணுவப் பயிற்சியும் அளிக்கப்படாது என்று அவர் கூறியுள்ளார். 

ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட பெண்கள் ஏன் அழுகிறார்கள் என்று இலங்கையின்
பெண் இராணுவத்தினரிடம் அல்ஜெசீரா கேள்வி எழுப்பியதற்கு, குடும்பத்தினரை விட்டு பிரியும் உணர்ச்சியால் அழுவதாக அவர்கள் கூறியுள்ளனர். 

கட்டாயமாக ஆட்சேர்க்கப்பட்டதாகவும், இராணுவத்தில் வேலைக்காக இவர்கள் கொண்டு செல்லப்படுவதாகவும் சிலர், கூறியுள்ளனர்” என்றும் சுமந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார். 

அதேவேளை, “பெண்கள் மட்டும் ஏன் தெரிவு செய்யப்பட்டனர்?” என்று கேள்வி எழுப்பியுள்ள நவசமசமாசக் கட்சியின் விக்கிரமபாகு கருணாரத்ன. ”இது மிகவும் மோசமான விவகாரம்” என்றும் தெரிவித்துள்ளார்.
[vuukle-powerbar-top]

Recent Post