Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி - மீராகுமார் நிராகரிப்பு

திரிணாமுல் காங்கிரஸ் கொண்டுவந்த நம்பிக்கப்யில்லா தீர்மானத்தை மக்களவை தலைவர் மீராக்குமார் நிராகரித்துவிட்டார்.


நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் இன்று கூடிய நிலையில் மத்தியில் ஆளும் காங்கிரஸ் மீது திரிணாமுல் காங்கிரஸ் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவந்தது.நேரடி அன்னிய முதலீடுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வருவதாக திரிணாமுல் காங்கிரஸ் தெரிவித்தது.ஆனால் நம்பிக்கையில்லா தீர்மானத்தை நிறைவேற்ற 50 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தேவையுள்ள நிலையில் 28 நாடாளுமன்ற உறுப்பினர்களே ஆதரவு தெரிவித்தனர்.இதனால் மக்களவை தலைவர் மீராகுமார் இந்த தீர்மானத்தை நிராகரித்துவிட்டார்.

மேலும் பிரதான கட்சியான பாஜக இந்த தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவிக்கவில்லை.மார்க்சிஸ்ட் உள்ளிட்ட மற்ற பிரதான கட்சிகளும் தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
[vuukle-powerbar-top]

Recent Post