Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

இலங்கை அரசுக்கு செல்வம் அடைக்கலநாதன் எச்சரிக்கை

அடுத்த ஆண்டுக்குள் தேசியப் பிரச்சினைக்கு இலங்கை அரசாங்கம் தீர்வு ஒன்றை வழங்கத் தவறினால், சாகும்வரை உண்ணாவிரதம் இருப்பேன் என்று தமிழ்த் தேசியக கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் எச்சரித்துள்ளார். 

இலங்கை நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய அவர், 

"இலங்கை அரசாங்கம் தேசியப் பிரச்சினைக்கான அரசியல்தீர்வு ஒன்றைக் காணும் வரை அனைத்துலக சமூகம் குறிப்பாக, அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகள் இலங்கைக்கான உதவிகளை நிறுத்த வேண்டும். 

அடுத்த ஆண்டுக்குள் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு இலங்கை
அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கும், அவரது அரசாங்கத்துக்கும் அமெரிக்காவும் இந்தியாவும் அழுத்தங்களைக் கொடுக்க வேண்டும். 

இலங்கை அரசாங்கத்துக்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை பலம் உள்ளது, இலங்கை அதிபரிடம் போதியளவு அதிகாரங்கள் உள்ளன. 

இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு அவருக்கு இவை போதுமானதாக உள்ளன. 

எமது பிரச்சினைகள் தீர்க்கப்படும் என்ற நம்பிக்கையில் தான், நாம் ஜனநாயக வழிக்கு வந்தோம். ஆனால் இன்னமும் அது சாத்தியமாகவில்லை. 

எமது மக்கள் அபிவிருத்தியைக் கேட்கவில்லை, அரசியல் தீர்வைத் தான் கேட்கின்றனர். அவர்களுக்கு அபிவிருத்தி தேவைப்பட்டிருந்தால், எம்மைத் தெரிவு செய்யாமல் இலங்கை அரசாங்கத்தை ஆதரித்திருந்திருப்பார்கள். 

எமக்கு வாக்களித்த மக்களுக்கு எதையும் செய்யாமல் மீண்டும் அவர்கள் முன் போக முடியாது. அரசியல் தீர்வொன்றை அடைவதற்காக எனது உயிரையும் கொடுக்கத் தயாராக உள்ளேன். 

அடுத்த ஆண்டுக்குள் தேசியப் பிரச்சினைக்கு இலங்கை அரசாங்கம் தீர்வு ஒன்றை வழங்கத் தவறினால், சாகும்வரை உண்ணாவிரதம் இருப்பேன்" என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
[vuukle-powerbar-top]

Recent Post