Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

விஜய் பார்த்து இரசித்த "விக்கி டோனர்" இந்தி படம்.


"துப்பாக்கி" படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது அங்கேயே 7 மாதங்கள் வரையில் தங்கியிருந்த "துப்பாக்கி" படக்குழுவினர் மும்பையின் சகல பகுதிகளிலும் படப்பிடிப்பை நடத்தியிருந்தனர்.

படப்பிடிப்பு மிக பரபரப்பாக நடைபெற்றுக்கொண்டிருந்த நேரத்தில் கூட தனக்கான நேரத்தை ஒதுக்கி அவர்கள் மும்பையில் தங்கியிருந்த காலங்களில் வெளியான அத்தனை இந்திப்படங்களையும் ஒன்றுவிடாமல் பார்த்து இரசித்துள்ளார் விஜய்.

மும்பையில் உள்ள "சினிப்லாக்ஸ்" திரை வளாகத்திற்கு ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் சென்று தானாகவே படத்திற்கான நுழைவு சீட்டு வாங்கி, திரையரங்கின் மத்தியில் உட்கார்ந்து மிக அமைதியாக படங்களை பார்த்து இரசித்துள்ளார் விஜய்.

பொதுவாக தமிழ்நாட்டில் இவ்வாறான ஒரு சுதந்திரத்துடன் அவரால் திரையரங்கு சென்று படங்களை பார்த்து இரசிக்க முடியாத நிலையில் மும்பை நகரம் இவ்வாறான ஒரு சுதந்திரத்தை தனக்கு தந்ததாக கூறியிருந்தார்.

"டான் 2 " மற்றும் "அக்நீபாத்"ஆகிய படங்களை பார்த்து இரசித்த விஜயிற்கு "விக்கி டோனர்"படமே மிகவும் பிடித்த படமாக இருந்ததாம்.

[vuukle-powerbar-top]

Recent Post