Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

அணுக் கழிவுகளை கொட்டுவதற்கு எதிர்த்து போராட்டம்

கூடங்குளம் அணு மின் நிலைய கழிவுகளை கோலார் தங்க வயல் பகுதியில் கொட்ட மத்திய அரசு முடிவெடுத்துள்ளது அண்மையில் வெளியானது. மத்திய அரசின் இந்த முடிவிற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் கிளம்பியிருக்கின்றன. இந்நிலையில் மத்திய அரசை கண்டித்து கோலார் தங்க வயல் பகுதியில் இன்று கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

கோலார் பகுதியில் மத்திய அரசு வங்கிகள் உள்பட கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருக்கின்றன. அரசுப் பேருந்துகள் இயக்கப்படவில்லை. பள்ளி, கல்லூரிகள் இயங்கவில்லை. இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்து.

போராட்டம் குறித்து கோலார் பகுதி தமிழ்ச்சங்கத்தினர் கூறுகையில் : கோலார் பகுதி மக்கள், கூடங்குளம் அணு கழிவை கோலார் தங்க வயலில் கொட்டுவதை எதிர்த்து தொடர் போராட்டம் நடத்தப்படும் என்றனர். இந்தப் போராட்டத்தில் தமிழகத்தைச் சேர்ந்த அ.தி.மு.க., கட்சியினர் நாம்தமிழர் இயக்கத்தினர் பா.ஜ.க., வினர் கலந்து கொண்டனர்.
[vuukle-powerbar-top]

Recent Post