Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

முல்லை பெரியாரில் எழுந்த எழுச்சி குமரி மாவட்டத்திலும் எழும் - வைகோ ஆவேசம்




இன்று(9-11-2012) நாகர்கோவிலில் நாடார் மக்களை இழிவு படுத்தி சி பி எஸ் இ பாட திட்டத்தில் பிஞ்சு மாணவர்களின் நெஞ்சில் நஞ்சை விதைக்கிற மத்திய அரசை கண்டித்து மதிமுக சார்பில் வைகோ தலைமையில் ஆர்பாட்டம் நடைபெற்றது. 

நாகர்கோவில் தலைமை தபால் நிலையம் அருகில் காலை முதலே மதிமுகவினரும் பொது மக்களும் குவிய தொடங்கினர். 11:25 மணிக்கு வைகோ வந்தார் வந்தவுடன் ஆர்பாட்டம் துவங்கியது. தென் திருவிதான்கூரை தமிழ் நாட்டோடு இணைக்க மார்ஷல் நேசமணி தலைமையில் போராடிய வரலாற்றை சொல்லியதோடு சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்திய அய்யா வைகுண்டரையும் சொல்லி விட்டு. முல்லை பெரியாறு என்றால் அந்த ஐந்து மாவட்ட பிரச்சனை என்று இல்லாமல் , காவிரி என்றால் டெல்டா பகுதி பிரச்சனை என்றில்லாமல், தமிழகத்தில் எங்கே ஒரு பிரச்சனை என்றாலும் அது தமிழர்களின் பிரச்சனை என்று கருதி மக்கள் போராட வேண்டும். 

குமரி மாவட்டத்தை மீட்க போராடிய மார்ஷல் நேசமணி தேவிகுளம் , பீர்மேடு , செங்கோட்டை , சித்தூர் , நெய்யாற்றின்கரை , திருவனந்தபுரத்துக்கு போராடினார் இவைகள் அனைத்தும் தமிழர் பூமி மார்ஷல் நேசமணி தொலை நோக்கு பார்வையோடு தேவிகுளம் பீர் மேட்டுக்கு போராடினார் அதை நாம் இழந்த காரணத்தால் தான் இன்று முல்லை பெரியாறு பிரச்சனை நம் தலையில் சுற்றுகிறது. 

மலையாளிகள் ஆதிக்கம் மத்திய அரசை ஆட்டி படைக்கிறது.. மத்திய அரசில் அங்கம் வைத்து கொண்டு மத்திய அரசின் காட்டு பாட்டில் இருக்கும் மத்திய கல்வி துறையிடம் இந்த இழிவான கருத்துக்களை நீக்க வேண்டும் என்று சொல்வதை விட்டு விட்டு ஒரு கட்சி நேற்று நாகர் கோவிலில் போராடியிருக்கிறது. இது யாரை ஏமாற்றும் மோசடி இதே போல் தான் ஈழத்தில் லட்ச கணக்கான மக்கள் கொலை செய்ய பட்ட போது அதை தடுத்து நிறுத்தாமல் இப்போது மக்களை ஏமாற்ற முனைகிறார்கள். 

மத்திய அரசு உடனடியாக இந்த வரலாற்று பிழையை நீக்க வேண்டும் டிசம்பர் 28 வரை கெடு விதிக்கிறேன் அப்போதும் இந்த பாட திட்டத்தை நீக்க வில்லை என்றால் 30 ஆம் தேதி லட்சகணக்கான மக்களை திரட்டி மார்த்தாண்டத்தில் மிக பெரிய போராட்டம் மதிமுக நடத்தும். முல்லை பெரியாரில் எழுந்த எழுச்சி குமரி மாவட்டத்திலும் எழும். இவ்வாறு திரு வைகோ கூறினார். 



[vuukle-powerbar-top]

Recent Post