Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

இன்று கடைப்பிடிக்கப்படும் மாவீரர் தினம்.


தமிழ் இனம் சுதந்திரத்தோடும் சுய மரியாதையோடும் வாழ்வதற்காக தன் உயிர் நீத்த ஆயிரம் ஆயிரம் மாவீரர்களை நினைவு கொள்ளும் நாள் இன்று.

மாவீரர்கள் போரிலே கடுமையாக போராடி தங்கள் உயிர் தமிழுக்கே என அர்ப்பணித்து துயில் கொள்ளும் அந்த அழகிய மாட கோபுரத்தை இடித்துத் தள்ளிய சிங்கள இனவெறிக்கு
ஒவ்வொரு தமிழனின் இதயத்திலும் அவர்கள் தூங்குகிறார்கள் என்பதை நினைவு கூறும் நாள் இன்று.

கடந்து  சென்ற ஒவ்வொரு மாவீரர் நாளின் போதும் எங்கள் தேசிய தலைவனின் குரலை கேட்க பல இலட்சக் கணக்கான மக்கள் ஆவலுடன் காத்திருப்பார்கள்.
எப்போது மீண்டும் கேட்போம் எங்கள் தமிழ் இனத் தலைவனின் கம்பீரக் குரலை?.......

மாவீரர் நாளை முன்னிட்டு ஒவ்வொரு தமிழ் உணர்வாளரும் தத்தம் வீடுகளில் மாவீரர்களுக்கு அஞ்சலி செய்யும் முகமாக விளக்கு ஏற்றி ஒரு நிமிட நேர மௌன அஞ்சலி செலுத்துமாறு மிக தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

[vuukle-powerbar-top]

Recent Post