Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

இரசிகர்களால் நிறுத்தப்பட்ட அஜித்தின் படப்பிடிப்பு.


விஷ்ணுவர்த்தன் இயக்கத்தில் பெயரிடப்படாத படமொன்றில் நடித்து வருகிறார் அஜித்.இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.அண்மையில் இப்படத்தின் படப்பிடிப்பின் சண்டைக்காட்சி படமாக்கப்பட்டுக்கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமான அஜித்தின் வலது காலில் பலத்த அடிபட்டிருந்தது.

ஆயினும் சில மணி நேர ஓய்வுக்கு பின்னர் மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார் அஜித்.தற்போது இப்படத்திற்கான படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்று வருகிறது. இதனை அறிந்த மும்பையிலுள்ள அஜித் இரசிகர்கள் படப்பிடிப்பு  தளத்துக்கு சென்று தங்கள் தலைவனை பார்க்க வேண்டும் என நினைத்து அங்கு சென்றுள்ளனர்.

இரசிகர்கள் அஜித்தை கண்டதும் அவரின் கையை பிடித்து தங்கள் அன்பு வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர், அத்துடன் அவருடைய கையொப்பத்தையும் வாங்க முண்டியடித்ததால், படப்பிடிப்பு  சிறிது நேரம் ஒத்திவைக்கப்பட்டது.

பின்னர் அங்கு வந்த காவல்துறையினர் இரசிகர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தியதன் பின்னரே படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்றது.

[vuukle-powerbar-top]

Recent Post