Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

தேசியத் தலைவர் பிறந்தநாள் விழா

கருத்தரங்கம் கவியரங்கம் கண்கொடை பதிவு முகாம் 08. 11. 2012 வியாழன் காலையில் சின்னப்போரூர், செந்தில்நகரில் உள்ள நாம் தமிழர் அரங்கத்தில், நடைபெற்றது. தமிழ்க்கொடி நாகராசன் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடினார்.

தேசியத் தலைவர் பிறந்தநாள் விழாக் கவியரங்கில், மரபுப் பாவலர் ஆலந்தூர் மோகனரங்கன் தலைமையில் கவிக்குயில் ஆனைவாரி ஆனந்தன், ஆவல்கணேசன், திரைப்பாடலாசிரியர் வாலறிவன், தஞ்சை சுமித்திரா, தமிழ்க்குருவி, இயக்குநர் ஐகோ, பேராசிரியர் பாரதிதாசன் முதலியோர் கவிதை பாடினர்.

பிரபாகரன் பிறந்தநாளையொட்டி கண்கொடை பதிவு முகாம் நடைபெற்றது. கண்கொடை பதிவுகள் இராமச்சந்திரா பல்கலைக்கழகத்து உதவியுடன் செய்யப்பெற்றன.விவேகானந்தன், அருணா ஆகியோரின் பின்னணி இசையுடன் தேவராசன் தமிழ் எழுச்சிப்பாடல்களைப் பாடினார்.

பெருந்திரளான தமிழன்பர்களும் இளைஞர்களும் பெண்களும் பங்கேற்றனர். தனித்தமிழ் வேங்கை மறத்தமிழ்வேந்தனநன்றிகூறினார்.

படம் இடமிருந்து வலம்:கவிஞர் ஆவல் கணேசன்,முனைவர் ஆணைவாரியார்,வாலறிவன்,ஆலந்தூர் மோகனரங்கனார்,தஞ்சை சுமித்ரா,கவிஞர் தனசேகரன்,முனைவர் இறையரசனார்,புலவர் மறத்தமிழ் வேந்தன்.
[vuukle-powerbar-top]

Recent Post