Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

"மங்காத்தா" படத்தில் அர்ஜுன் கதாபாத்திரத்தை ஈடு செய்வாரா அஜித்?


வெங்கட் பிரபு இயக்கத்தில் 2011 இல் வெளிவந்த "மங்காத்தா" படத்தை இந்தியில் தயாரிக்க தங்களுக்கு ஆசை இருக்கிறதா என்ற கேள்விக்கு பதிலளித்த  வெங்கட் பிரபு,

இப்படத்தை பார்த்த ஏராளமான இந்தி பட உலகிற்கு நெருக்கமானவர்கள் இப்படத்தை இந்தியில் தயாரிக்க வேண்டும் என ஆசைப்பட்டதாகவும், ஆயினும் அஜித் இப்படத்தில் மீண்டும் நடித்தால் மட்டுமே இவ்வாறு இப்படத்தை இந்தியில் தயாரிக்கும் எண்ணம் தனக்கு இருப்பதாகவும் வெங்கட் பிரபு தெரிவித்தார்,

"மங்காத்தா" படத்தில் அர்ஜுன் நடித்த கதாபாத்திரத்தையே இந்தியில் அஜித்துக்கு வழங்க தான் ஆசைப்பட்டதாகவும், ஆயினும் இது குறித்து அஜித்துடன் இன்னும் பேசவில்லை என்றும் தன்னுடைய விருப்பத்துக்குரிய படங்களில் இதுவும் ஒன்றாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

வெங்கட் பிரபுவின் இவ்வாசை நிறைவேறும் பட்சத்தில்,அஜித்தின் இரசிகர்களுக்கு அது நிச்சயம் ஒரு மிக பெரிய விருந்தாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை. இரு  படத்தில் இரு வேறு கதாபாத்திரத்தில் ஏற்கனவே நடித்த விக்ரம் போல் அஜித்தும் நடிக்கும் வாய்ப்பு கிட்டுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

ஆயினும் இது குறித்து நாம் அஜித்துடன் நெருக்கமானவர்களுடன்   தொடர்பு கொண்டு கேட்டபோது,"மங்காத்தா" இந்தி படத்தில் நடிக்கும் எந்த ஒரு முடிவையும் அஜித் இன்னும் எடுக்கவில்லை என தெரிவித்தனர்.



[vuukle-powerbar-top]

Recent Post