Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

முதுமலை புலிகள் காப்பகத்தை விரைவில் திறக்க முடிவு

சிறந்த சுற்றுலா தலமாகவும், வன விலங்குகளின் புகழிடமா கவும் விளங்கும் முதுமலை புலிகள் காப்பகத்தில் யானை கள், புலிகள், சிறுத்தைகள், மான்கள் உள்பட பல்வேறு வனவிலங்குகள் உள்ளன.

முதுமலை புலிகள் காப்பகம் சிறந்த சுற்றுலா தலமாக விளங்குவதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆண்டு தோறும் முதுலைக்கு வந்து செல்வது வழக்கம். அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் வாகன சாவாரி, யானை சாவாரி போன்றவைகள் மூலமாக அழைத்து சென்று வனப்பகுதியையும், வன விலங்குகளையும் வனத்துறை யினர் சுற்றி காண்பித்து வந்தார்கள்.

இந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு புலிகள் காப்பகத்தில் சுற்றுலா சம்பந்த மான நடவடிக்கைகளை மேற் கொள்ள உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. இந்த தடையை கடந்த சில நாட்க ளுக்கு முன்பு உச்ச நீதிமன்றம் நீக்கி உத்தர விட்டது. மேலும், புலிகள் காப்பகத்தில் வரை முறைக்கு உட்பட்டு சுற்றுலா மேற்கொள்ளலாம் என்றும் தீர்ப்பு கூறியது.

இதனையடுத்து, முதுமலை புலிகள் காப்பகம் திறக்கப்படும் என்று சுற்றுலா பயணிகள் ஆவலுடன் எதிர்பார்த்த நிலையில் முதுமலை புலிகள் காப்பகம் திறக்கப்படாமல் தொடர்ந்து மூடப்பட்டு உள் ளது. இதனால், சுற்றுலா பயணிகள் பெரும் ஏமாற்றம் அடைந்து உள்ளனர்.

இந்த நிலையில், உச்ச நீதி மன்ற தீர்ப்பின் படி நிபந்தனை களுக்கு உட்பட்டு முதுமலை புலிகள் காப்பகம் திறப்ப தற்கான பணிகளை வனத் துறை அதிகாரிகள் மேற் கொண்டு வருகிறார்கள். இதனையடுத்து, முதுமலை தெப்பக்காட்டில் உள்ள வாக னங்கள், யானைகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள் ளன.

வனத்துறை உயர் அதிகாரி களின் உத்தரவு வந்தவுடன் சில நாட்களில் முதுமலை புலிகள் காப்பகம் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதுமலை புலிகள் காப்பகம் விரைவில் திறக்கப்படுவதால் இதற்கான ஆலோசனை கூட்டங்களும் நடைபெற்று வருகின்றனர்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஏராளமான சுற்றுலா பயணிகள் முதுமலை புலிகள் காப்பகத்திற்கு வந்த னர். ஆனால், புலிகள் காப்ப கம் மூடப்பட்டு உள்ளதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத் துடன் திரும்பி சென்றனர்.

இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த பலத்த மழையின் காரணமாக முதுமலை புலிகள் காப்ப கத்திற்கு யானைகள் கூட்டம் கூட்டமாக வர தொடங்கி உள்ளன. அவ்வாறு வரும் யானைகள் காலை மற்றும் மாலை நேரங்களில் சாலை ஓரங்களில் வந்து செல்வதால் சுற்றுலா பயணிகள் யானைகளை ஆர்வத்துடன் பார்த்தவாறு செல்கின்றனர்.
[vuukle-powerbar-top]

Recent Post