Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

அண்ணாமலை பல்கலைக்கழகம் காலவரையறையின்றி மூடல்

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஆட்குறைப்பு பணிகள் நடைபெறுவதைக் கண்டித்தும் சம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊழியர்கள் வரும் 14-ம் தேதி முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்தப் போவதாக அறிவித்ததைத் தொடர்ந்து, இன்று முதல் அண்ணாமலை பல்கலைக்கழகம் காலவரையறையின்றி மூடப்படுவதாக இன்று பல்கலைக்கழக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இங்கு நடைபெறும் பல்கலைக்கழகத் தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. தேர்வுக்கான புதிய தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும்.

பல்கலைக்கழக விடுதியில் தங்கிப் படிக்கும் மாணவர்கள் உடனடியாக வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது என்று பல்கலைக்கழக துணைவேந்தர் ராமநாதன் இன்று சிதம்பரத்தில் நிருபர்களிடம் தெரிவித்தார்.
[vuukle-powerbar-top]

Recent Post