Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

முகநூலில் கருத்து தெரிவித்து பெண்கள் கைதானது சட்ட விரோதம் - கபில் சிபல் கண்டனம்



மறைந்த சிவசேனா தலைவர் பால்தாக்கரே இறுதி ஊர்வலம் மும்பையில் நேற்று முன்தினம் நடந்தது. அப்போது மும்பையில் முழு அடைப்பு அனுசரிக்கப்பட்டது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. 

இந்த நிலையில் தானே நகரில் வசிக்கும் ஷஹீன் தத்தா என்ற பெண் தனது முகநூல் பக்கத்தில் (பேஸ்புக்)  முழு அடைப்பு அனுசரிக்கப்பட்டதை விமர்சித்து கருத்து தெரிவித்து இருந்தார். அவரது கருத்தை தோழி, ரேணு ஆமோதித்து அதற்கு விருப்பம் தெரிவித்து இருந்தார். 

இதைத் தொடர்ந்து மும்பை காவல்துறை 2 பெண்களையும் கைது செய்தனர். அவர்கள் மீது விரோத மனப்பான்மையை ஏற்படுத்துதல், மோதலை தூண்டுதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் அவர்கள் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர். 

2 பெண்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மும்பை காவல்துறைக்கு எதிராக கடும் கண்டனம் எழுந்துள்ளது. மத்திய மந்திரி கபில் சிபல் கூறுகையில், 

மும்பை காவல்துறை 2 பெண்களை கைது செய்தது சட்ட விரோதம். காவல்துறை சட்டத்தை தவறாக கையாண்டு இருக்கிறார்கள். மராட்டிய அரசும், காவல்துறையும் நிலைமையை காப்பாற்ற வேண்டும், இதுபோன்ற காரணங்களுக்காக கைது நடவடிக்கை எடுத்து இருப்பது சட்டத்துக்கு புறம்பானது என்றார். 

கிரண்பெடி கருத்து தெரிவிக்கையில், தவறான புகாரின் பேரில் 2 பெண்களை கைது செய்திருப்பது தவறு. அவர்களை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதும் தவறு. காவல்துறையினர் பெரும் தவறு செய்து விட்டார்கள் என்றார். 

ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியசாமியும், 2 பெண்கள் கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

[vuukle-powerbar-top]

Recent Post