Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

"தல" என்ற வார்த்தையை புறக்கணித்த அஜித்.



விஷ்ணுவர்த்தன் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படத்திற்கு   இன்னும் பெயர் சூட்டப்படாத நிலையில், இப்படத்திற்கான படப்பிடிப்பு மிக மும்முரமாக  நடைபெற்று வருகிறது.

இப்படத்திற்காக கதை வசனம் எழுதியிருக்கிறார் சுபா.அண்மையில் அஜித் குறித்து தனது கருத்தை பதிவு செய்துள்ள சுபா,"தல" என்று தமிழ் சினிமா இரசிகர்களால் அழைக்கப்படுவதற்கு ஏற்ற நடிகர் அஜித் என்றும் அவரைப்போல் ஒரு சிறந்த மனிதரை காண முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

இப்படத்திற்காக சுபா  கதை வசனம் எழுத்கிறார் என்பதை அறிந்ததும் அவரிடம், அஜித் சென்று, "தல" என்று எல்லோரும் என்னை அழைக்கிறார்கள் என்பதற்காக கதை வசனத்தில் எனக்காக பிரத்தியேகமான மாற்றங்கள் எதுவும் தேவையில்லை என்றும் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் தருமாறு வசனம் இருந்தால் போதும் என்றும் உங்களுக்கான சுதந்திரத்தில் நான் தலையிடமாட்டேன் எனவும் கூறியுள்ளார்.

இவ்வாறு எத்தனை பேர் பட வசன கர்த்தாக்களுக்கு ஒரு முக்கியத்துவத்தை கொடுத்திருப்பார்கள் என தன் வியப்பை எம்மிடம் பகிர்ந்துகொண்டார் சுபா.

"தல" என்றால் சும்மாவா????

[vuukle-powerbar-top]

Recent Post