Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

மேட்டூர் அணையிலிருந்து வெளியேறும் நீரின் அளவு குறைவு

மேட்டூர் அணையிலிருந்து வெளியேறும் நீரின் அளவு வெறும் ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. போதிய மழை இல்லாத காரணத்தால் கடந்த பல நாட்களாக மேட்டூர் அணையின் நீர் வரத்து குறைந்த வண்ணமே இருந்தது.

இந்நிலையில் அணையிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு வினாடிக்கு 12 ஆயிரம் கன அடியில் இருந்து படிப்படியாக ஆயிரம் கன அடியாக குறைந்துள்ளது. ஏற்கெனவே சம்பா சாகுபடிக்கு காலதாமதமாக செப்டம்பர்7ம் தேதிதான் தண்ணீர் திறந்து விடப்பட்டது.

வழக்கமான நாட்களை விட கூடுதலான நாட்களுக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்தனர். தற்போது குறிப்பிட்ட காலமான ஜனவரி 28ம் தேதிக்கு முன்னரே தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

மேட்டூர் அணையின் நீர் மட்டம் 16.46 டி.எம்.சி மட்டுமே இருப்பதால் சம்பா சாகுபடிக்கு போதுமான தண்ணீர் திறக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
[vuukle-powerbar-top]

Recent Post