Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

கரை தட்டிய கப்பலை மீட்பதில் தொடர்ந்து சிக்கல்

கடல் பயணத்திற்கு தகுதியற்றதாக கூறப்படும் பிரதிபா காவிரி கப்பலைக் கடலுக்கு கொண்டு செல்லும் பணி வியாழக்கிழமை தொடங்கியது.

கப்பலுக்குள் இருக்கும் ஃபர்னஸ் ஆயில் கடலில் கலந்தால், அது சுற்றுச்சூழலுக்கு பேராபத்தாக முடியும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எச்சரித்துள்ளதால், கப்பலை கடலுக்குள் கொண்டு செல்லும் பணி முக்கியத்துவம் பெற்றது. கப்பலை மீட்கும் பணியை நேரில் காண ஏராளமான மக்களும் ஆர்வத்துடன் கடற்கரைக்கு வந்திருந்தனர்.

இழுவைக் கப்பலான மாளவியாவின் உதவியுடன் பிரதிபா காவிரியை மீட்கும் பணி தொடங்கி நடைபெற்றது. கப்பலின் ஒரு பகுதி மணலில் புதைந்து இருந்ததால், மீட்புப் பணியில் தாமதம் ஏற்பட்டது. மாலை நேரம் நெருங்கிய தருணத்தில், இழுவைக் கப்பலையும், பிரதிபா கப்பலையும் இணைத்திருந்த இரும்புக் கயிறு எதிர்பாராத விதமாக அறுந்தது.

பிரதிபா கப்பலின் எடையைத் தாங்கி இழுக்கும் அளவுக்கு இரும்புக் கயிற்றின் திறன் இல்லாததே இதற்கு காரணம் எனக் கூறப்படுகிறது.

இதனிடையே, வெள்ளிக்கிழமை அதிகாலை 3 மணியளவில் பிரதிபா கப்பலை மீட்கும் பணி தொடரும் என கடல்சார் வாணிபத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மற்றொரு இழுவைக் கப்பலும் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்படலாம் எனக் கூறப்படுகிறது.

இவையெல்லாம் இவ்வாறு இருக்க ஊடகங்கள் அங்கிருக்கக்கூடிய செய்திகளை சேகரிப்பதில் பெரும் சிக்கலும் நிலவி வருகிறது. காவல்துறையினரால் மிரட்டப்படுவதாகவும் புகைப்படக்கருவிகள் பறிமுதல் செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அங்கிருந்து எந்த உண்மைத்தகவலும் வெளியே செல்லக்கூடாது என கடல்சார் வாணிபத்துறை அதிகாரிகள்  நினைப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
[vuukle-powerbar-top]

Recent Post