Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

விஜயை இயக்க ஆசைப்படும் வெங்கட் பிரபு.


வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜித் நடித்த "மங்காத்தா" படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருந்தபோது,தனது  இரசிகர்களை குஷிப்படுத்த நினைத்த அஜித், நடிகர் விஜயுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்து அதனை இணையத்தளம் வாயிலாக வெளியிட்டிருந்தார்.

இந்த சந்திப்பு தொடர்பாக அண்மையில் கருத்து தெரிவித்திருந்த வெங்கட் பிரபு,இந்த சந்திப்பு அஜித்தின் வற்புறுத்தலின் பேரிலேயே இடம் பெற்றதாக கூறியிருந்தார். "மங்காத்தா"படத்தின் படப்பிட்டிப்பு நடைபெற்றுக் கொண்டிருந்த பகுதியிலேயே விஜயின் "வேலாயுதம்" படத்தின் படப்பிடிப்பு  நடைபெற்றதாகவும் இதனை அறிந்த அஜித் உடனடியாக அவ்விடத்திற்கு சென்று விஜயை பார்த்துவிட வேண்டும் என்று விரும்பியதாகவும், விஜயின் அன்றைய நாள் படப்பிடிப்பு முடிவடைவதற்குள் அங்கு சென்று தாம் இருவரும் விஜயை பார்த்ததாகவும் கூறினார்.

இருவரும் ஒருவரை ஒருவர் நேரில் பார்த்துக்கொண்டதும் மிகுந்த உற்சாகத்துடன் சமமான மரியாதையை பகிர்ந்து கொண்டதாகவும் தெரிவித்தார்.

இதேவேளை, விஜயுடன் சேர்ந்து பணியாற்ற ஆவலுடன் இருப்பதாகவும் அவருடைய தேதிகள் கிடைக்கும் பட்சத்தில் அடுத்த படத்திற்கான வேலைகள் ஆரம்பிக்கப்படும் எனவும் வெங்கட் பிரபு
தெரிவித்தார்.

[vuukle-powerbar-top]

Recent Post