Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

பயன்படுத்திய கார் உதிரிபாகங்களில் இளைஞன் உருவாக்கிய ஹெலிகாப்டர்

நைஜீரியாவை சேர்ந்த மாணவ மாணவிகள் தமது முயற்சியில் பல அரிய கண்டுபிடிப்புக்களை சாதனைகளாக படைக்கின்றனர் ஒரு இளைஞன் பயன்படுத்திய பழைய கார் மற்றும் மோட்டார் சைக்கிள் உதிரிப்பாகங்களை கொண்டு உலங்குவானூர்தி ஒன்றை உருவாக்கி உள்ளார் 
நைஜீரியாவைச்சேர்ந்த பட்டப்படிப்பு மாணவன் ஒருவன் தனது சொந்த முயற்சியில் ஒரு ஹலிக்கொப்டரை உருவாக்கி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளான். 24 வயதான முபாரக் முஹம்மது அஹமதுல்லா என்கின்ற இளைஞனே இவ்வாறு  உருவாக்கியவர் ஆவார்.
பழைய கார் மற்றும் மோட்டார் சைக்கிள் உதிரிப்பாகங்களை கொண்டு  8 மாதங்கள் முழு முயற்சியில் ஈடுபட்டதன் விளைவாக இவர் இவ்வாறு ஒரு ஹலிகொப்டரை உருவாக்கியுள்ளார்.  இவற்றுள் சிறிய சிறிய பிழைகள் இருப்பினும் இவரது முயற்சியை கண்டு பலரும் வியப்பில் ஆழ்ந்துள்ளார்கள்.
12 மீட்டர் நீளமுள்ள இந்த ஹலிக்கொப்டர் 7 அடி உயரம் வரை மட்டுமே பறக்கக்கூடியதாக உள்ளது. இதற்கு ஹோண்டா மோட்டார் சைக்கிளின் 133 குதிரை வலு உள்ள எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. உள்ளே பின்புறம் இருவர் இருக்க கூடிவாறும் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளது.
இது பற்றி கருத்து தெரிவித்த முஹம்மது ஒரு காரை உருவாக்குவதை விட ஹலிக்கொப்டர் இலகு என நினைத்து இதனை தொடங்கியதாக குறிப்பிட்டார். இதற்காக இணையங்களில் இருந்து பல விடயங்களை தான் கற்றுக்கொண்டதாக தெரிவித்த அவர்  அடுத்த முயற்சி இதைவிட மேலாக பறக்க கூடியவாறு தான் உருவாக்க இருப்பதாகவும் குறிப்பிட்டார். மேலும்  இந்த ஹலிக்கொப்டரை எவ்வாறு இயக்க வேண்டும் என்கின்ற செயல் முறைகளையும் அங்கு வந்திருந்தவர்களுக்கு செய்து காட்டியமை குறிப்பிடத்தக்கது.




[vuukle-powerbar-top]

Recent Post