Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

நாகையில் பாதிக்கப்பட்டது சம்பா சாகுபடி

நாகை மாவட்டத்தில் விவசாயத்திற்கு தண்ணீர் இல்லாததால் ஒரு லட்சம் ஏக்கருக்கும் மேற்பட்ட விளை நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால், பயிர்கள் கருகும் நிலை உருவாகியுள்ளது. நாகை மாவட்டத்தில் விவசாயப் பணிக்கு சுமார் 40 ஆயிரம் மின் மோட்டார்கள் பயன்படுத்தப்படுகின்றன. தற்போது தரப்படும் மூன்று மணி நேர மின்சாரத்தால் விளை நிலங்களுக்கு பாசனம் செய்ய முடியவில்லை என்று விவசாயிகள் கூறியுள்ளனர்.

பருவ மழை தற்போது பொய்த்து போன நிலையில், மேட்டூர் அணையிலிருந்து இன்னும் தண்ணீர் திறக்கப்படவில்லை. இந்நிலையில், இன்னும் 15 நாட்களுக்குள் தண்ணீர் திறக்கப்படவில்லை எனில், சம்பா சாகுபடி கடுமையாக பாதிக்கப்படும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
[vuukle-powerbar-top]

Recent Post