Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

ஏர்செல், மேக்சிஸ் வழக்கு விசாரணையை விரைவாக நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவு

ஏர்செல், மேக்சிஸ் வழக்கு விசாரணையை விரைவாக நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த வழக்கில் சட்டப்படியான நடவடிக்கைகள் உடனடியாக எடுக்க வேண்டும் என சிபிஐக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2004-ம் ஆண்டு மே 26-ம் தேதி தயாநிதி மாறன் மத்திய தகவல் தொலைத்தொடர்பு துறை அமைச்சராக பதவியேற்ற பிறகு ஏர்செல் நிறுவனம் ஏற்கனவே விண்ணப்பத்திருந்த 7 தொலைத்தொடர்பு வட்டங்களுக்கான உரிமம் வழங்க பல்வேறு விவரங்கள் கேட்கப்பட்டன. இது தொடர்பாக பலமுறை ஏர்செல் நிறுவனம் விளக்கம் அளித்தும் மேலும் மேலும் விளக்கம் கேட்கப்பட்டது.

இதற்கிடையில் கடந்த 2005 டிசம்பர் 6-ம் தேதி ஏர்செல் நிறுவனத்தின் 74 சதவீத பங்குகளை, மலேசிய நிறுவனமான மேக்சிஸ் நிறுவனம் 3600 கோடி ரூபாய்க்கு வாங்கியது. இதன் மூலம் ஏர்செல் பங்குகளை அமைச்சர் பதவியை பயன்படுத்தி தயாநிதி மாறன் மேக்சிஸ் நிறுவனத்திற்கு மிரட்டி விற்கச் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பான வழக்கும் உச்சநீதி மன்றத்தில் தொடரப்பட்டது.

இந்த வழக்கில் சுப்பிரமணியன் சுவாமியும், பிரசாந்த் பூஷனும் மனுதாரராக உள்ளனர். இந்த வழக்கில், விசாரணையை விரைவாக நடத்த வேண்டும் என்றும், சட்டப்படியான நடவடிக்கைகள் உடனடியாக எடுக்க வேண்டும் என சிபிஐக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த வழக்கு விசாரணையை நவம்பர் 7-ந் தேதிக்கு ஒத்திவைத்தது.
[vuukle-powerbar-top]

Recent Post