Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

தமிழகத்தில் கன மழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறியிருப்பதால் அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகத்தில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.மேலும் இது தெற்கு ஆந்திரா – வட தமிழகம் நோக்கி நகர்ந்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதேபோன்று புதுச்சேரியிலும் கன மழை பெய்யும் என்றும் அறிவித்துள்ள வானிலை ஆய்வு மையம் மீனவர்கள் வங்கக் கடலில் கவனத்துடன் மீன்பிடிக்குமாறும் அறிவுறுத்தியுள்ளது.
[vuukle-powerbar-top]

Recent Post