Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

அசம்பாவிதங்களை தடுக்கவே ரகசியம் காக்கப்பட்டது ~ ஷிண்டே கருத்து

மும்பை தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதி அஜ்மல் கசாப் இன்று காலை 7.30 மணியளவில் எரவாதா சிறைச்சாலையில் தூக்கில் இடப்பட்டான்.

இது குறித்து மத்திய மந்திரி சுஷில் குமார் ஷிண்டே கூறும்போது, கசாப் தூக்கிலிடப்படுவது குறித்து எந்த வித அறிவிப்பையும் அரசு வெளியிடாமல் ரகசியம் காத்ததற்கு அடிப்படை காரணம் வேறு எந்த அசம்பாவிதங்களும் நடைபெறாமல் இருப்பதற்காக தான்.

மும்பை தாக்குதலில் தொடர்புடைய மற்றொரு தீவிரவாதி கட்டீல் சித்திக் கொல்லப்பட்டதற்கு பழிவாங்கும் வகையில் ஆகஸ்ட் 1ல் தொடர் வெடிகுண்டு தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டது.

எனினும், சரியாக செயல்படாத காரணத்தால் வெடிகுண்டுகள் வெடிக்கவில்லை. இதனால் பேராபத்து நீங்கியது.

எனவே, கசாப் தூக்கிலிடப்படுவதை தொடர்ந்து இது போன்ற அசம்பாவிதங்கள் ஏதும் நிகழ்ந்து விடாமல் இருப்பதற்காக தான் தகவல்கள் வெளியிடப்படவில்லை என்று அவர் கூறினார்.
[vuukle-powerbar-top]

Recent Post