Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

ஏ.ஆர்.முருகதாசின் வேண்டுகோளை புறக்கணித்த சந்தோஷ் சிவன்.


ஏ.ஆர். முருகதாஸ், ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவனை கடந்த காலங்களில் சில நிகழ்சிகளில் பார்த்த போது தன் படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்ற வர வேண்டும் என கேட்டுள்ளார்.ஆயினும் அந்த சந்தர்பங்களை  எல்லாம் புறக்கணித்து வந்த சந்தோஷ் சிவன், விஜய் நடிப்பில் முருகதாஸ் இயக்கிய "துப்பாக்கி" படத்தில் பணியாற்றியிருந்தார்.

தமிழில் "துப்பாக்கி" படத்திற்கு கிடைத்த வெற்றியை அடுத்து அக்ஷே குமார் நடிப்பில் இந்தியில் இப்படத்தை இயக்க முடிவெடுத்த முருகதாஸ், தமிழில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய சந்தோஷ் சிவனிடம்,இந்தி "துப்பாக்கியிலும்" ஒளிப்பதிவாளராக பணியாற்ற வரவேண்டும் என கேட்டுள்ளார்.

ஆயினும் இதை முற்றிலுமாக மறுத்துள்ளார் சந்தோஷ் சிவன்.ஏற்கனவே பல படங்களில் பரபரப்பான ஒளிப்பதிவாளராக பணியாற்றிவரும் சந்தோஷ் சிவன்,  படங்களை இயக்குவதிலும் தன் கவனத்தை திருப்பியுள்ளார்.

[vuukle-powerbar-top]

Recent Post