Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

போர்க்குற்றம் தொடர்பாக சுதந்திரமான சர்வதேச விசாரணை வேண்டும் ~ உலகத் தமிழர் மாநாடு

இலங்கை இறுதிப்போரின்போது நடைபெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றம் தொடர்பாக சுதந்திரமான சர்வதேச விசாரணைக்கு ஐ.நா சபையும், உலகநாடுகளும் உத்தரவிட வேண்டும் என இலண்டனில் நடைபெற்ற உலகத் தமிழர் மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது. பிரித்தானியா தமிழர் பேரவை சார்பில் 3 நாள் உலகத் தமிழர் பன்னாட்டு மாநாடு இலண்டனில் புதன்கிழமை தொடங்கியது.

இதில், பிரிட்டனைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், தி.மு.க., பா.ம.க., இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் நாம் தமிழர், இந்து மக்கள் கட்சி, தமிழ் தேசிய கூட்டமைப்பு என 30க்கும் மேற்பட்ட அமைப்பினர், சர்வதேச தமிழர் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என இலண்டன் மாநகரில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக ஏராளமானோர் கூடி இலங்கை அரசுக்கு அழுத்தம் தரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

மாநாட்டின் ஒரு பகுதியாக ஏழாம் தேதி நடைபெற்ற அனைத்துக்ட்சி நாடாளுமன்ற உறுப்பினர் குழுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய தி.மு.க பொருளாளர் மு.க.ஸ்டாலின் இலங்கை பிரச்னைக்கு அரசியல் தீர்வு காண வழிவகை செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.

இலங்கையில் இன அழிப்பு நடைபெற்று வருவதாகக் கூறிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலர் டி.ராஜா, இப்பிரச்சனையில் இந்திய அரசு தனது போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.

மேலும், சுதந்திரமான சர்வதேச விசாரணை வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

இலங்கை மீதான போர்க்குற்றம், இன அழிப்பு ஆகியவை குறித்து ஆராய ஐ.நா.சபை உடனடியாக விசாரணக்கு உத்தரவிட வேண்டும் அனைத்துக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.

மாநாட்டின் இரண்டாவது நாளாக வியாழக்கிழமை உலகத்தமிழ் அமைப்புகள், மனித உரிமை ஆர்வலர்கள், ஈழத்தமிழ் ஆதரவு அமைப்பினர் கலந்து கொண்டு விவாதித்தனர்.
[vuukle-powerbar-top]

Recent Post