Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

காஸா தாக்குதல் எதிரொலி ~ இஸ்ரேலிய இணையத்தளங்கள் மீது தாக்குதல் முயற்சிகள்

ஹமாஸ் இலக்குகளை குறிவைத்து காஸா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் அதன் இணையத்தளங்களை குறிவைத்து தொடர்ச்சியான முடக்கும் முயற்சிகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதுவும் ஒன்று, இரண்டு முயற்சிகள் அல்ல இலட்சக்கணக்கான முடக்கும் முயற்சிகள். எனினும் அம் முயற்சிகள் அனைத்தையும் வெற்றிகரமாக முறியடித்துள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

ஆனால் பிரபல இணையத்தை முடக்கும் குழுவான 'எனோன்யமஸ்' காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதலை கண்டித்துள்ளதுடன் அதன் இணையக் கட்டமைப்பை ஊடுருவிக் காட்டுவதாகவும் சவால் விட்டுள்ளதுடன் அம்முயற்சியிலும் இறங்கியுள்ளது.

இதனையடுத்து இணையத்தளங்கள் பலவற்றை வெற்றிகரமாக ஹெக்செய்துள்ளதுடன் தளங்கள் பலவற்றின் தரவுத்தொகுப்புகளை அழித்துள்ளதாகவும் அறிவித்துள்ளது.

இதே குழுவே பல்வேறு முன்னணி நிறுவனங்கள், அமைப்புகளின் இணையத்தளங்களை ஊடுருவல் செய்ததுடன் முகநூலினை முடக்கும் செய்வதாக சவால் விட்டு காலக்கெடு வழங்கியதுடன் அதில் தோல்வியும் அடைந்தது.

தற்போதைய தகவல்களின் படி இஸ்ரேலிய இணையத்தளங்கள் மீது சுமார் 60 மில்லியன் முடக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிகின்றது. தனியொரு குழுவாக அன்றி வெவ்வேறு குழுக்கள் பல இணைந்து முடக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாக தெரியவருகின்றது.

குறிப்பாக பாகிஸ்தானைச் சேர்ந்த சைபர் ஆர்மி, மற்றும் சொம்பி- கே.எஸ்.ஏ போன்ற ஹெக்கர் குழுக்கள் இஸ்ரேலிய இணையத்தளங்களை ஊடுருவும் செயற்பாட்டில் மும்முரமாக இறங்கியுள்ளதாகத் தெரிகின்றது.

தமது இணையத்தளங்களை ஊடுருவும் முயற்சிகள் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ள போதிலும் அதன் இணையத்தளங்கள் சில முடக்கப்பட்டுள்ளதாக முடக்கர்கள் தெரிவிக்கின்றனர்.

இஸ்ரேலிய பாதுகாப்பு பிரிவு, பிரதமர் அலுவகம், வங்கிகள் உட்பட பல அமைப்புகளின் இணையத்தளங்கள் மீது முடக்கும் முயற்சிகள் நடைபெற்றுவருகின்றன. இவை மட்டுமன்றி இஸ்ரேலிய வர்த்தக நிறுவனங்களின் இணையத்தளங்களும் முடக்கும் முயற்சிகளுக்கு உள்ளாகியுள்ளன.

காஸா மோதல் ஒரு பக்கத்தில் நடைபெற்று வரும் நிலையில் சமூக ஊடகங்களான டுவிட்டர் மற்றும் முகநூல் மோதல் தொடர்பான சூடான விவாதங்கள் இடம்பெற்று வருகின்றன.

இஸ்ரேல் மீதான ஊடுருவல் முயற்சிகள் உலகநாடுகள் சைபர் யுத்தத்தினை (Cyberwarfare) நோக்கி நகர்வை காணக்கூடியதாகவுள்ளதாக அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

தனிப்பட்ட நபராலோ அல்லது குழுவொன்றினாலோ மேற்கொள்ளப்படும் ஊடுருவல் நடவடிக்கைகளுக்கு அப்பால் நாடொன்றினால் மற்றுமொரு நாட்டின் மீது நடத்தப்படும் ஊடுருவல் தாக்குதல்கள் அண்மைக்காலமாக அதிகரித்துள்ளன.

ஈரானின் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா நடத்திய ஊடுருவல் தாக்குதல்களையும், மத்தியகிழக்கில் உள்ள சில நாடுகளின் வங்கிகள் மீது ஈரான் நடத்தியதாகக் கூறப்பட்ட தாக்குதல்களையும் குறிப்பிடமுடியும்.

இவை அனைத்தும் உலக நாடுகள் ஆயுதங்களுக்காக செலவழிக்கும் தொகையினைப் போல இணையப் பாதுகாப்பிற்காகவும் செலவிடும் காலம் வந்து விட்டமையே எடுத்துக் காட்டுகின்றது. 

தற்கால யுத்தங்கள் ஏவுகணை, இரத்தம் ஆகியவற்றிற்கு அப்பால் கனணி, இணையம் ஆகியவற்றை சார்ந்து வந்துள்ளமை இஸ்ரேல் இணையக்கட்டமைப்பு மீதான தாக்குதலை உதாரணமாகக் காட்டமுடியும்
[vuukle-powerbar-top]

Recent Post