Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

"கூகுள் கூகுள்..." பாடல் நடன இயக்குனருக்கு இன்று திருமணம்.


நடன இயக்குனரான ஷோபிக்கு  இன்று திருமணம் நடைபெறவுள்ளது.சென்னையிலுள்ள சாந்தோம் கிருஸ்தவ தேவாலயத்தில் நடைபெறும் மிக பிரமாண்டமான நிகழ்வில் தன்னுடைய காதலியை  மணம் முடிக்கிறார் ஷோபி.

அதனை தொடர்ந்து இன்று மாலை "எம்.ஆர்.சி" நகரில் நடைபெறும் அவரது திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பெருமளவிலான திரை நட்ச்சத்திரங்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

நடன இயக்குனரான ஷோபி அண்மையில் விஜய் நடிப்பில் வெளியான "துப்பாக்கி" படத்தில் இடம்பெற்றுள்ள "கூகுள் கூகுள்" மற்றும் "அந்தார்டிக்கா" ஆகிய  இரண்டு பாடல்களுக்கு நடன இயக்குனராக பணியாற்றியுள்ளார்.

அத்தோடு அவருக்கு  மிக பெரிய வரவேற்பை பெற்றுக் கொடுத்த  பாடல்களாக "டாக்சி டாக்சி" மற்றும் "ஆத்திசூடி" ஆகியவை அமைத்திருந்தன.

இன்றைய தினம் திருமண பந்தத்தில் இணையும் ஷோபிக்கும் அவர் மனைவிக்கும் அலை செய்திகள் தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது.

[vuukle-powerbar-top]

Recent Post