Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

தமிழகத்தில் மின்தட்டுபாட்டை நீக்க போர்கால உணர்வோடு நடவடிக்கை எடுக்க வேண்டும் ~ தா.பாண்டியன்

தமிழகத்தில் மின்தட்டுபாட்டை நீக்க போர்கால உணர்வோடு மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தா.பாண் டியன் கூறினார்.

ராஜபாளையம் காமராஜ் மண்டபத்தில் இந்திய கம்யூ னிஸ்டு கட்சியின் விருதுநகர் மாவட்ட கிளை செயலாளர்களின் அரசியல் பயிலரங்கம் நடைபெற்றது.இதில் மாநில செயலாளர் தா.பாண்டியன் கலந்து கொண்டார். அப் போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–

தமிழகத்தில் நிலவி வரும் மின்பற்றாக்குறையால் பெரும் பொருளாதார இழப்பு ஏற்பட்டு தமிழகமே ஸ்தம்பித்து போய் உள்ளது. மின்பிரச்சினையை தீர்க்க மத்திய அரசு புதிய மின் தடங்களை ஏற்படுத்தி மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கவில்லை. மாநில அரசும், தமிழகத்தில் உள்ள அனல்மின் நிலையங்களை முழுதிறனோடு இயங்க செய்ய வேண்டிய நட வடிக்கையை மேற்கொள்ளவில்லை.

கடந்த 18 மாதங்களாக அனல்மின் நிலையங்கள் தமிழகம் முழுவதும் ஏதாவது ஒரு வகையில் பழுதாகி கொண்டே இருக்கிறது. இதனால் வேலை இழப்பு ஏற்பட்டு மக்களின் வாழ் வாதாரம் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இப் பிரச்சினைக்கு தீர்வு காண போர்கால உணர்வோடு மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண் டும்.

மத்திய மந்திரி நாராயண சாமி கூடங்குளம் அனு மின் நிலையம் மின்சாரம் குறித்து முன்னுக்கு பின் முரணாக பேசி வருகிறார். இங்கு கிடைக்க கூடிய மின் சாரத்தை கேரளாவும், ஆந்திராவுக்கும் ஒப்பந்தப்படி வழங்கப்படும் என கூறி வருகிறார். இவர் பேசுவது தமிழக மக்களை கொதிப்படைய செய்கிறது. உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பின்னர் தான் கூடங்குளம் அனுமின் நிலையம் செயல் படும். தமிழகத்தில் நாள் தோறும் கொலை, கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இது காவல்துறையின் மெத்தன போக்கையே காட்டுகிறது. மழையின்றி வறட்சி ஏற்படா மல் இருக்க தமிழக அரசு ஆந்திரா, கர்நாடகா மாநில அரசுடன் பேசி தண்ணீர் கிடைக்க வழிகாண வேண் டும்.

பேட்டியின் போது தென்காசி தொகுதி எம்.பி. லிங் கம், மாவட்ட துணை செயலாளர் அழகிரிசாமி, மாவட்ட தலைவர் ராமசாமி, மாவட்ட செயலாளர் பொன்னுபாண்டியன் எம்.எல்.ஏ., மாவட்ட பொரு ளாளர் குருசாமி, நகர செய லாளர் ரவி மாவட்ட குழு பாடகலிங்கம், கவுன்சிலர் ஜான்கென்னடி உள்பட பலர் இருந்தனர்.
[vuukle-powerbar-top]

Recent Post