Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

ரஜினியின் "ராணா" படம் கைவிடப்பட்டது ஏன்?


கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்க இருந்த "ராணா" படமானது பூஜையுடன் நின்றுவிட்டது அனைவரும் அறிந்ததே.ஏ.வி.எம் கலையகத்தில் நடந்த பூஜையின் போது ரஜினி , தீபிகா படுகோனே மற்றும் முக்கிய தமிழ் சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டு மிக விமர்சையாக "ராணா" படப் பூஜையினை கொண்டாடியிருந்தனர்.

இப்படத்திற்காக ஒரு நாள் படப்பிடிப்பு முடிந்த நிலையில் ரஜினி நோய்வாய்ப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.பல நாட்கள் வைத்தியசாலையில் இருந்த அவர் குணமாக  பல நாட்கள் ஆனது.

இவ்வாறு குணமடைந்த பின்னர் "ராணா" படத்தில் நடிக்காமல் தன்னுடைய மகள் இயக்கத்தில் "கோச்சடையான்"படத்தில் நடித்து முடித்து விட்டார் ரஜினி.

இது குறித்து ராணா"படத்தை இயக்க இருந்த ரவிகுமாரை தொடர்புகொண்டு கேட்டபோது.இப்படத்திற்கான படப்பிடிப்பு ஆரம்பித்த முதல் நாளிலேயே ரஜினிக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டது இதனாலேயே இப்படத்தை மீண்டும் இயக்கவில்லை என்றும்,வேறு ஒரு காரணமும்  இல்லை என்றும் எப்போதும் ரஜினி  உடல் நலத்தோடு நீண்ட காலம் வாழவேண்டும் என்று தான் ஆசைப்படுவதாகவும் கூறினார்.

[vuukle-powerbar-top]

Recent Post