Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பதற்றத்தை தணிக்க ஐ.நா. பொது செயலாளர் கெய்ரோ சென்றார்

ஹமாஸ் போராளிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பாலஸ்தீனத்தின் காஸா நகரம் மீது கடந்த 7 நாட்களாக இஸ்ரேல் கடுமையான தாக்குதல் நடத்தி வருகிறது.

கடல் மற்றும் வான் வழியாக நடந்த தாக்குதல்களில் ஆயுத கிடங்குகள், போலீஸ் நிலையங்கள், ஹமாஸ் போராளிகளின் பதுங்குமிடங்கள் தாக்கப்பட்டன. 1,350 இலக்குகள் மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது.

இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். போர் நிறுத்த முயற்சியில் ஈடுபட்டுள்ள எகிப்து நாட்டுடன் ஒத்துழைத்து, தாக்குதல்களை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். இருநாடுகளுக்கும் இடையே சாத்தியமான ஒரு சமாதானத்தை ஏற்படுத்தும் பேச்சுவார்த்தையில் பங்கேற்க நான் கெய்ரோ செல்வேன் என்று ஐ.நா. பொது செயலாளர் பான் கீ மூன் கூறியிருந்தார்.

இந்நிலையில், ஐ.நா. பொது செயலாளர் பான் கீ மூன், இன்று காலை எகிப்து தலைநகரான கெய்ரோ சென்றார். அங்கு பான் கீ மூன் எகிப்து வெளியுறவு மந்திரி முகமது கமெல் அம்ரை சந்தித்தார்.

இஸ்ரேலுக்கு ஹமாஸ் இயக்கம் அளித்த போர் நிறுத்த கடிதத்தை ஒப்படைத்தார் எகிப்து நாட்டின் உளவு துறை அதிகாரி ஒருவர். போர் நிறுத்தம் தொடர்பான இறுதி ஒப்பந்தத்தை ஏற்படுத்தி, பாலஸ்தீன எல்லையில் நிலவி வரும் போர் பதற்றத்தை ஐ.நா. பொது செயலாளர் பான் கீ மூன் தணிப்பார் என அந்நாட்டு ஊடகங்கள் கருத்து வெளியிட்டுள்ளன.
[vuukle-powerbar-top]

Recent Post