Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

தமிழகம் முழுவதும் தீபாவளி சிறப்புப் பேருந்துகள் இன்று முதல் இயக்கம்

தீபாவளியை முன்னிட்டு இன்று முதல் தமிழகம் முழுவதும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

தீபாவளி நெருங்கி வரும் நிலையில் பேருந்துகளில் கூட்ட நெரிசலை குறைக்கும் விதத்தில் ஆண்டு தோறும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம்.அந்த வகையில் தமிழகம் முழுவதும் 6000-க்கும் அதிகமான சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட இருப்பதாகவும் இதில் சென்னையில் மட்டும் 2848 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுவதாகவும் தமிழக அரசு செய்தி வெளியிட்டிருந்தது.இந்த நிலையில் தீபாவளி விடுமுறை துவங்க இருப்பதால் இந்த சிறப்புப் பேருந்துகளில் இயக்கம் இன்று முதல் துவங்க இருக்கிறது.

மேலும் 300 கி.மீட்டருக்கும் அதிகமாக செல்லும் பேருந்துகளில் முன்பதிவு வசதியும் உள்ளது. இதற்க்காக கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 16 சிறப்பு முன்பதிவு நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளது.மேலும் www.tnstc.in என்ற இணையதளம் மூலமாகவும் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
[vuukle-powerbar-top]

Recent Post