Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

மிக மென்மையான குணம் படைத்தவர் மணிரத்னம்-துளசி நாயர்.


நடிகை ராதாவின் இளைய மகளான துளசி நாயர் மணிரத்னத்தின் "கடல்" படத்தின் மூலமாக திமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைக்கவுள்ளார்.இப்படத்தில் நடிப்பது குறித்து முதன்முதலில் மனம் திறந்துள்ள துளசி,

முதலில் இப்படத்தில் நடிப்பதற்கு தான் அச்சப்பட்டதாகவும்,மணிரத்னம் போன்ற மிகப் பெரிய இயக்குனர் படத்தில் அறிமுக நாயகியாக நடிப்பதில் பல சிக்கல்கள் எழக்கூடும் என தான் நினைத்ததாகவும்,ஆனால் மணிரத்னமோ இப்படத்தின் ஒவ்வொரு காட்சியையும் மிக அழகாக தன் அருகிலிருந்தே தனக்கு விளக்கப்படுத்தி ஒவ்வொரு காட்சியிலும்  எவ்வாறு நடிக்கவேண்டும் என்பதை கற்றுக்கொடுத்ததாகவும் கூறினார்.

எப்போதுமே தன் மீது கோபத்தைக் காட்டாமல் மிக நிதானமாக அவர் இருந்ததாகவும், இப்படிப்பட்ட ஒரு இயக்குனரின் படத்தில் அறிமுகமாவதை நினைத்து தான் பெருமைப்படுவதாகவும் கூறினார்.

"கடல்" படத்தில் கெளதம் கார்த்திக் அறிமுக நாயகனாக நடித்துக்கொண்டுள்ளார்.இப்படத்திற்கான முன்னோட்டக்காட்சி மற்றும் இசை ஆகியவற்றை ஆவலுடன் காத்திருக்கிறது தமிழ் சினிமா உலகம்.

[vuukle-powerbar-top]

Recent Post