Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

சிவகாசி விபத்தால் இந்தியாவில் சீன பட்டாசுகள் அமோக விற்பனை

சிவகாசியில் பட்டாசு உற்பத்தி குறைந்துள்ள நிலையில், சீன பட்டாசுகள் இந்தியாவில் அதிகளவில் விற்பனைக்காக வந்துள்ளன.

தீபாவளி பண்டிகையையொட்டி சிவகாசியில் பட்டாசுகள் அதிகளவில் உற்பத்தி செய்யப்பட்டு, கோடிக்கணக்கான ரூபாய்க்கு வர்த்தகம் நடந்து வந்தது. ஆனால், தற்போது சிவகாசியில் பட்டாசு தொழில் பல பிரச்னைகளை சந்தித்து வருவதாக பட்டாசு உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

முதலிப்பட்டியில் நடந்த வெடி விபத்தில் 39 பேர் பலியானதை அடுத்து, பல்வேறு பட்டாசு ஆலைகள், பட்டாசு உற்பத்தியை நிறுத்தி விட்டன.

சுற்றுச்சூழல் பிரச்னை, அரசு அதிகாரிகளின் தொடர் கண்காணிப்பு, தொழிலாளர்கள் பிரச்னை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் உற்பத்தி குறைந்திருப்பதாகக் கூறப்படுகிறது.

சிவகாசியில் பட்டாசு உற்பத்தி குறைந்திருப்பதால், சீன பட்டாசுகள் இந்த ஆண்டு இந்தியாவில் அதிகமாக விற்பனைக்கு வந்துள்ளன. வெடிக்கும் ரகங்கள், மத்தாப்பு ரகங்கள் உள்ளிட்டவை அதிகமாக இறக்குமதியாகியுள்ளன.

உள்நாட்டு உற்பத்தி குறைந்துள்ளதால், கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 30 முதல் 40 சதவிகிதம் வரை விற்பனை குறைந்துள்ளதாக சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர்கள் கூறியுள்ளனர்.
[vuukle-powerbar-top]

Recent Post