Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

நாளை ஏவப்படவுள்ள இலங்கையின் செயற்கைக்கோள் – ராஜபக்சவின் இளைய மகனின் கனவாம்

இலங்கையின் முதலாவது தொலைத்தொடர்பு செயற்கைக்கோள் நாளை சீனாவில் இருந்து விண்ணுக்கு ஏவப்படவுள்ளது. 

இந்த செயற்கைக் கோள் சீனாவின் சீசாங் ஏவுதளத்திலிருந்து நாளை பிற்பகல் 3.30 மணியளவில் விண்ணில் ஏவப்படும். 

சுமார் 360 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் இந்த செயற்கைக்கோள் உருவாக்கப்பட்டுள்ளது. 

இந்த செயற்கைக்கோள், அடுத்த ஆண்டு ஜூன் மாதத்துக்குப் பின்னர் வர்த்தக நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படும். 

இதனைக் கட்டுப்படுத்துவதற்கான நிலையம் கண்டியிலுள்ள பல்லேகலவில் அமைக்கப்படவுள்ளது. 

இந்த செயற்கைக்கோள் ஏவப்பட்டதும், உலகில் சொந்தமாக தொலைத்தொடர்பு செயற்கைக்கோளை வைத்திருக்கும் 45வது நாடாக இலங்கை இடம்பெறும். 

தெற்காசியாவில் இந்தியா, பாகிஸ்தானுக்கு அடுத்ததாக, சொந்தமாக தொலைத்தொடர்பு செயற்கைக்கோளை கொண்டுள்ள மூன்றாவது நாடு என்ற பெருமையை இலங்கை பெறவுள்ளது. 

இந்த செயற்கைக்கோள் இலங்கை அதிபரின் இளைய மகன் ரோகித ராஜபக்சவின் கனவுப்படி உருவாக்கப்பட்டுள்ளதாக இலங்கை அரசாங்கம் கூறியுள்ளது.
[vuukle-powerbar-top]

Recent Post