Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

சூப்பர் ஸ்டாருடன் இணையும் விஜய்.


சூப்பர் ஸ்டாருடன் இணைந்து தன் அடுத்த படத்தில் நடிக்கவுள்ளார் விஜய்.ஆம் மலையாள சூப்பர் ஸ்டாரான மோகன்லாலுடன்தான் அவர் இணைந்து நடிக்கவுள்ளார்.

இயக்குனர் விஜயின் இயக்கத்தில் விஜய் மற்றும் அமலா பால் நடிக்கவுள்ள புதிய படமொன்றிலேயே மோகன்லால் நடிக்கவுள்ளார்."உன்னை போல் ஒருவன்" படமே மோகன்லால் இறுதியாக நடித்த நேரடித் தமிழ் படமாக அமைந்திருந்தது.

இதேபோல் நடிகர் தனுஷும் இன்னுமோர் மலையாள சூப்பர் ஸ்டாரான  மம்முட்டியுடன் இணைந்து நடிக்கவுள்ளார்."கம்மத் அண்ட் கம்மத்"என பெயர் சூட்டப்பட்டுள்ள மலையாளப் படமொன்றில் கௌரவ வேடத்தில் நடிக்கவுள்ளார் தனுஷ்.

இப்படத்தில் மம்முட்டி,திலீப்,குஞ்சாக்கு பூபன்,கார்த்திகா நாயர் மற்றும் ரீமா கலிங்கல் ஆகியோர் நடிக்கவுள்ளனர்.

[vuukle-powerbar-top]

Recent Post