Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் ஆறாவது நாளாக தொடர் தாக்குதல்: ஐ.நா., தலையிட்டு போரை நிறுத்துமா?

போரை ஐ.நா., தலையிட்டு முடிவுக்கு கொண்டுவருமா?
கடந்த ஐந்து நாட்களாக பாலஸ்தீனத்தின் எல்லைப் பகுதியான காஸா மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதலை நடத்தி வந்தது. இந்நிலையில், ஆறாவது நாளான இன்றும் இஸ்ரேல் விமானங்கள் தாக்குதலைத் தொடர்ந்தன. கடல் வழி மற்றும் வான்வழியாக நடந்த இந்த தாக்குதல்களில் ஆயுத கிடங்குகள், பொலிஸ் நிலையங்கள், ஹமாஸ் போராளிகளின் பதுங்குமிடங்கள் தாக்கப்பட்டன. இதுவரை 1350 இலக்குகள் மீது இஸ்ரேல் இராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது.

இந்நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு வீடொன்றின் மீது இஸ்ரேல் நடத்திய விமானத் தாக்குதல்களில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் கொல்லப்பட்டுள்ளதாக பி.பி.சி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

போரை நிறுத்தும் முயற்சிகளில் எகிப்து இறங்கியுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இஸ்ரேல்-பாலஸ்தீன் போரை முடிவுக்கு கொண்டுவரும் பேச்சுவார்த்தை முயற்சிகளுக்காக பான் கி மூன் எகிப்து செல்லவுள்ளார்.
[vuukle-powerbar-top]

Recent Post