Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

டிசம்பர் 14 இல் வெளியாகும் "நீதானே என் பொன் வசந்தம்".


இசைஞானி இளையராஜாவும் இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனும் இணைந்துள்ள "நீதானே என் பொன் வசந்தம்" படத்தின் பாடல்கள் வெளியிடும் நிகழ்வில் ஏராளமான சர்வதேச புகழ் வாய்ந்த இசை கலைஞர்களை அழைத்து வந்து மிக பெரிய இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்தியிருந்தார் கெளதம் மேனன்.

இப்படத்திற்கான படப்பிடிப்புக்கள் அனைத்தும் முடிவடைந்து தற்போது வெளிவர தயார் நிலையில் உள்ள இப்படமானது இதுவரை படத் தணிக்கை குழுவிற்கு அனுப்பப்படவில்லை.அதற்கு முன்னதாகவே படக்குழுவினருக்கு இப்படத்தை காண்பித்துள்ளார் கெளதம் மேனன்.

படத்தை பார்த்து இரசித்த இசைஞானி உற்பட அனைத்து படக்குழுவினரும் படம் சிறந்த முறையில் வந்திருப்பதாகவும் நிச்சயம் இப்படத்திற்காக "யு" தரச்சான்றிதலே கிடைக்கும் எனவும் தெரிவித்துள்ளனர்.

டிசம்பர் மாதம் 14 ஆம் தேதி திரைக்கு வரும் இப்படத்தில் இருந்து நீக்கப்பட்ட சில காட்சிகளை இணையம் வாயிலாக வெளியிட இப்படக்குழுவினர் தீர்மானித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

[vuukle-powerbar-top]

Recent Post