Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com


இங்கிலாந்து பெண் பத்திரிகையாளரும், பிபிசி செய்தியாளருமான பிரான்சிஸ் ஹாரிசன் சென்னையில் 14.12.2012 வெள்ளிக்கிழமை செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். 

அப்போது அவர், பிபிசி செய்தியாளராக இலங்கை, ஈரான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் பணியாற்றியுள்ளேன். இலங்கையில் போர் நடந்தபோது, நான்கு ஆண்டுகள் அங்கிருந்தேன். கடைசி கட்டப்போர் மிகவும்கொடூரமானது. போருக்குப் பிறகு எஞ்சிய மக்கள் மாணிக் பார்ம் என்ற முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். அங்கிருந்த பலர் ஆஸ்திரே-யா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு தப்பிச் சென்றனர். மிக கொடுமையான இறுதிக்கட்டப்போரை நேரில் பார்த்து பல்வேறு இன்னல்களுக்கு ஆளான 10 பேரை நேரில் சந்தித்து அவர்களுடைய அனுபவங்களை புத்தகமாக எழுதினேன். இலங்கை போரின் போது போர்க் குற்றங்கள் நடைபெற்றதற்கு இந்த நூல் ஆதாரமாக திகழும். போர்க்குற்றம் குறித்து சுதந்திரமான விசாரணை நடத்தப்பட்டால் இந்த நூல் முக்கிய ஆதாரமாக எடுத்துக்கொள்ளப்படும் என்று நம்பிக்கை எனக்கு உள்ளது. இலங்கை தமிழர் பகுதிகளான முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா, மன்னார் ஆகியவற்றின் மக்கள் தொகை குறித்த புள்ளி விவரத்தை திரட்டினேன். 2006ல் அங்கு எவ்வளவு பேர் வாழ்ந்தார்கள். போருக்குப் பின்னர் 2010ல் உள்ள மக்கள் எவ்வளவு பேர் என்ற விவரத்தை ஒப்பிட்டபோது 1 லட்சத்து 6 ஆயிரத்து 104 பேரை காணவில்லை என்பது கண்டறிய முடிந்தது. போருக்குப் பிறகும் கூட மக்கள் அங்கிருந்து தப்பிச் செல்வதிலேயே முனைப்பாக இருக்கிறார்கள். அங்கு ராணுவம் குவிக்கப்பட்டிருப்பதும், சிங்கள மயமாவதும் கண்கூடாக தெரிகிறது. போரின்போது கொன்று குவிக்கப்பட்ட பிணங்களை எண்ண முடியவில்லை என்று ஐ.நா. வெளியிட்ட புள்ளிவிவரமே கூறுகிறது. ஒரு சிறிய பகுதியில் லட்சக்கணக்கான மக்களை அடைத்து வைத்து ராணுவ விமானம் குண்டு மழை பொழிந்திருக்கிறது என்றார்.


[vuukle-powerbar-top]

Recent Post