Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

1995 யாழ்ப்பாண மக்கள் அனைவரும் சிங்கள ராணுவ நடவடிக்கை காரணமாக வெளியேறியபோது,அவர்கள் மீது தாக்குதல் நடந்தது.அதே நேரத்தில் தமிழகத்தில் முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான ஆட்சி நடந்தபோது,சென்னையில் தெற்காசிய விளையாட்டு போட்டி நடத்தப்பட்டது.அதில் சிங்கள விளையாட்டு அணியும் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டது.அதை எதிர்த்து தமிழத்தில் பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.இந்த போராட்டங்கள் நம்பிக்கை அளிக்காத வகையில் இருந்தபோது,தமிழகத்தில் ஒரு எழுச்சி ஏற்பட வேண்டும்,ஈழத்தமிழர் மீதான தாக்குதல் நிறுத்தப்பட வேண்டும் என்ற காரணத்தினால் 24 வயதே கொண்ட பெரம்பலூர் பகுதியை சேர்ந்த அப்துல் ரவூப் என்ற இளைஞர்,ஈழ போராட்டங்களை கவனித்து கொண்டு,பங்கு கொண்டு இருந்தவர்,டிசம்பர் 15 ,1995 அன்று 'ஈழத்தமிழர்களை காப்பாற்றுங்கள்.அங்கே ஈழத் தமிழ் மக்கள் கொள்ளப்படும் போது,இங்கு தெற்காசிய விளையாட்டு போட்டிகள் ஒரு கேடா?தெற்காசிய விளையாட்டு போட்டிக்கு சிங்கள விளையாட்டு அணியை தமிழகத்திற்கு அழைப்பதா?' என்ற கேள்வியை தமிழ் சமூகத்தின் முன் வைத்து தன்னை எரித்து கொண்டார்.தமிழ் ஈழத் தலைவர் பிரபாகரன் தனது வீர அஞ்சலியை செலுத்தி அறிக்கை வெளியிட்டார்.தமிழ் ஈழ மண்ணில் மாவீரர்களுக்கான நடுகல்களுக்கு இடையில் தியாகி ரவூப்-க்கு நடுகல் நடப்பட்டு,விடுதலை புலிகளால் அஞ்சலி செலுத்தப்பட்டது
























[vuukle-powerbar-top]

Recent Post