Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

டெல்லியில் ஓடும் பஸ்சில் 23 வயது மருத்துவ மாணவி 6 பேர் கும்பலால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார். இதில் பாதிக்கப்பட்ட மாணவி ஆபத்தான நிலையில் உயிருக்கு போராடிக்கொண்டு இருக்கிறார். அவருக்கு கடந்த 10 நாட்களாக டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் மிகப்பெரிய சிகிச்சை அளிக்கப்பட்டது. 

இந்த நிலையில் மேல் சிகிச்சைக்காக சிங்கப்பூரில் உள்ள மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதற்காக நேற்று முன்தினம் இரவு அவசர சிகிச்சை விமானம் மூலம் சிங்கப்பூர் கொண்டு செல்லப்பட்டார். ஆனாலும் அம்மாணவி சிகி்ச்சை பலனின்றி பரிதாபமாக இன்று அதிகாலையில் இறந்தார். அவரது இறப்பு நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திள்ளதுடன், டில்லியில் மாணவ, மாணவிகளின் போராட்டம் மீண்டும் வெடிக்குமோ என்ற காரணத்தினால் நகர் முழுவதும் சிறப்பு அதிரடி போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அங்கே இரயில் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. இந்தியா கேட்டும் மூடப்பட்டுள்ளது. 

பாலியல் வன்கொடுமைக்கு மாணவி டில்லியிலேயே இறந்து விட்டதாகவும், மக்கள் போராட்டம் பெரிதாவதைக் கண்டு பயந்த மத்திய அரசு, சிங்கப்பூர் கொண்டு சென்று அங்கே இறந்ததாக கண்துடைப்பு நாடகத்தை அரங்கேற்றியிருப்பதாகவும் சிலர் கூறுகின்றனர். இந்த தகவல் சமூக வலைத் தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
[vuukle-powerbar-top]

Recent Post