Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

தந்தை, சகோதரன் மற்றும் மாமனால் 2 ஆண்டுகளாக பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்ட பள்ளி மாணவி தற்போது மீட்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் கேரளாவில் நடந்துள்ளது. பள்ளி மாணவியான அந்த 13 வயது பெண், தனக்கு நேரிட்ட அநீதியை பள்ளி ஆசிரியரிடம் கூற, அவர் காவல்துறையில் புகார் செய்தார். இவரின் தந்தை மற்றும் சகோதரன், மாமா ஆகியோரால் 2010 ஆண்டிலிருந்து தொடர்ந்து கற்பழிக்கப்பட்டு வந்தது விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து, மூன்று குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவத்துக்கு கேரளாவில் மனித உரிமை அமைப்புகளும், மகளிர் அமைப்புகளும் கடும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை கிடைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.
[vuukle-powerbar-top]

Recent Post