Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com


இரண்டு நாட்களுக்கு முன்பு அயனாவரத்தில் 6ம் வகுப்பு படிக்கின்ற 11 வயது சிறுவன் உடலில் தீவைத்து தற்கொலை செய்து கொண்டான். அவன் இறப்புக்கான காரணம் அதிர்ச்சியளிக்ககூடியது. ராஜேஷ் ராமு என்பது அந்த சிறுவனின் பெயர், அவனுடைய தாயும், தந்தையும் கட்டிட தொழிலாளிகள். சபரிமலைக்கு செல்வதற்காக மாலை போட்டிருக்கிறான். தினமும் காலையில் 5.30 மணிக்கெல்லாம் எழுந்து பூஜை செய்வது வழக்கமாம். 

சம்பவம் நடந்த அன்று காலையில் பூஜைக்குரிய விளக்கு மற்ற சாமாண்களையெல்லாம் 8 வயதான தன்னுடைய தங்கையிடம் கழுவி வைக்கச் சொல்லியிருக்கிறான். அவள் மறுக்கவே அவளை அடித்திருக்கிறான். அவளும் திருப்பியடிக்கவே, மீண்டும் அடிக்க முயற்சிக்கும் பொழுது அவள் தப்பியோடிவிட்டாள். உடனே கோபமாகி வீட்டைப் பூட்டிக் கொண்டு தனக்கு தீவைத்துக் கொண்டுவிட்டான். எவ்வளவு சாதாரணமான விடயம் இதற்கெல்லாம் தற்கொலை செய்து கொள்ளக் கூடிய அளவிலே நம்முடைய பிள்ளைகள் இப்போது வளர்க்கப்படுகிறார்கள். மேலும் ராஜேஷ் ராமுவை தற்கொலைக்கு தூண்டிய காரணி எது? 

ஒருவன் மாலை போட்டுவிட்டால் அவனை எல்லோரும் மதிக்க வேண்டும், அவனுக்கு வீட்டிலிருக்கும் பெண்களெல்லாம் பணிவிடைகள் செய்ய வேண்டும். அவன் செய்கின்ற தவறுகளை பொறுத்துக் கொள்ள வேண்டும், அவனை திட்டவோ அடிக்கவோ கூடாது என்றெல்லாம் மிக பிற்போக்குத்தனமான கற்பிதங்களை இந்த 'சபரிமலை சாமிகள்' உருவாக்கியிருக்கிறார்கள். இந்த சிறுவனும் இதையே நம்பிய காரணத்தினால்தான், அந்த கற்பிதங்கள் உடைபடும் பொழுது அவனால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. தான் அவமதிக்கப்பட்டுவிட்டதாக எண்ணிக் கொண்டு இப்படியொரு தவறைச் செய்துவிட்டான். 

மேலும் பெரும்பாலான 'அய்யப்ப சாமிகள்' மாலை போடுகின்ற சமயங்களில் இது போன்றே பெண்களுக்கு பலவிதமான சிரமங்களை கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். மாதவிடாய் காலத்தில் கண்ணுக்கு முன்னே வராதே என்று சொல்வது, காலை நான்கு மணிக்கே எழுந்து குளித்துவிட்டுதான் முன்னால் வரவேண்டும், சமைக்க வேண்டும் என்று சொல்லுவது. பூஜை சாமான்களை கழுவி வைத்து பூஜைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும், இப்படி பல சிரமங்கள். மாலை போடுபவர்களை விட அவர்கள் வீட்டுப் பெண்கள்தான் இவங்களுடைய சுத்த பத்தத்திற்காக அதிக சிரமப்படுகிறார்கள்.





[vuukle-powerbar-top]

Recent Post