Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

கூடங்குளம் அணு உலைக்கு எதிராக போராட்டங்கள் சாலை மறியல்கள் எதிர்ப்புகள் வலுத்துக்கொண்டு செல்லும் நிலையில் கூடங்குளம் மின் உற்பத்தி தை மாதம் ஆரம்பமாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த தகவலை இந்திய அணு சக்தி கழகம் அறிவித்துள்ளது. இதுவரைகாலமும் நாராயண சாமி 15 நாட்களில் மின் உற்பத்தி என்று கூறியிருந்தார். அதை கடந்த ஒருவருடமாக கூறிக்கொண்டே இருந்தார். ஆனால் தற்போது அணு சக்தி கழகம் அறிவித்திருப்பது கொஞ்சம் அதிர்ச்சியை உண்டுபண்ண வைக்கிறது என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

டிசெம்பர் இறுதிக்குள் மின்னுற்பத்தி தொடங்கும் என முன்பு மத்திய அரசு அறிவித்திருந்தது தற்போது ஜனவரிக்கு மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
[vuukle-powerbar-top]

Recent Post