Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

காவிரி நீர் பங்கீடு வழக்கு விசாரணை நாளைக்கு ஒத்திவைப்பு

காவிரியில் தண்ணீர் திறந்துவிடுமாறு கர்நாடக அரசுக்கு உத்தரவிடக் கோரி தமிழக அரசு தொடர்ந்த வழக்கை உச்சநீதிமன்றம் நாளைக்கு ஒத்திவைத்துள்ளது.

டிசம்பர் ஒன்றாம் தேதி முதல் 15 தேதி வரையிலான தண்ணீர் தேவை மற்றும் இருப்பு குறித்து இருமாநிலங்களும் தாக்கல் செய்த அறிக்கைகளின் மீதான 2-வது நாள் விசாரணை, இன்று உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது, காவிர் நீர் பங்கீடு விவகாரத்தில், கர்நாடக அரசு சட்டத்திற்கு புறம்பாக செயல்பட்டு வருவதாக தமிழகத் தரப்பு வழக்கறிஞர் வைத்தியநாதன் தெரிவித்தார்.

காவிரி நடுவர் மன்றம் அனுமதித்துள்ள பாசனப் பகுதியை விட அதிகளவில் பாசனப் பகுதியை புதியதாக கர்நாடகா உருவாக்கி இருப்பதாகவும், தமிழகத்திற்கு தரவேண்டிய தண்ணீரை அதற்கு பயன்படுத்துவதாகவும் தெரிவித்தார். மேலும், கோடைக்காலத்தில் அணைகளில் இருந்து விதிமுறைகளை மீறி கர்நாடகா தண்ணீரை எடுத்துக் கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதனிடையே, வடகிழக்குப் பருவ மழையால் தமிழகத்தின் தண்ணீர் தேவை குறையும் என்று, கர்நாடக தரப்பு வழக்கறிஞர் கூறினார். ஆனால், கடலோரப் பகுதிகளில் பெய்யும் மழையால் டெல்டா விவசாயிகளுக்கு பலன் இருக்காது என்று வழக்கறிஞர் வைத்தியநாதன் எடுத்துக் கூறினார்.

மேலும், தண்ணீர் இல்லாததால் குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டதைப் போல, தற்போது சம்பா சாகுபடியும் பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். இந்நிலையில், இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி டி.கே. ஜெயின் தலைமையிலான அமர்வு வழக்கின் விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்தது.
[vuukle-powerbar-top]

Recent Post