Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com


சென்னையில் பேராசிரியர் தெய்வ சுந்தரம் ஒருங்கிணைத்த கணினித் தமிழ் மாநாடு வெகு சிறப்பாக சென்னை லயோலா கல்லூரியில் நடைபெற்றது . முழு நாள் மாநாடாக நடைபெற்ற இந்நிகழ்வில் ஏராளமான மாணவர்கள் , தமிழ் அறிஞர்கள் , மொழி ஆர்வலர்கள் , பேராசிரியர்கள் மற்றும் இன உணர்வாளர்கள் கலந்து கொண்டனர் . மாநாட்டின் முக்கிய நோக்கம் தமிழக அரசு சார்பில் கணினித் தமிழ் வளர்ச்சி துறை உருவாக வேண்டும் , அதற்கான நிதி ஒதுக்குதல் வேண்டும் , அரசு துறைகள் அனைத்தும் கணினித் தமிழ் படுத்தப் பட வேண்டும் என்பது தான் . இந்த மாநட்டில் அரசு தரப்பில் இருந்து திரு சேகர் இயக்குனர் தமிழ் வளர்ச்சித் துறை , திரு விசய ராகவன் இயக்குனர் உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் , திரு சீனிவாசன் , கணினித் தமிழ் சங்கம் , திரு பொன்ன வைகோ துணை வேந்தர் எஸ் ஆர் எம் பல்கலை கழகம் , முனைர்வர் ராசேந்திரன், துணை இயக்குனர் தமிழ் வளர்ச்சி துறை போன்ற பல அரசு துறையை சார்ந்த அதிகாரிகளும் , திரு ராசாராம் கல்வித் துறை செயலாளர் போன்ற உயர்மட்ட அதிகாரிகளும் பங்கு பெற்றனர் . தமிழர் பண்பாடு நடுவத்தின் சார்பாக  இராஜ்குமார் பழனிசாமி கலந்து கொண்டு தமிழ் மொழியை எங்கெல்லாம் நிலைநாட்ட வேண்டும் என்ற கருத்தை அரசுக்கு வலியுறித்தினார் . பல்வேறு தமிழ் ஆர்வலர்கள் தமிழ் மொழியை வணிக மொழியாக்குவதற்கும் , கணினியில் தமிழ் மொழி பல்வேறு தளங்களின் எடுத்துச் செல்ல வேண்டும் என்ற கோரிக்கையையும் அரசுக்கு வைத்தனர் . மாநாட்டின் முடிவில் நம் கோரிக்கையை ஏற்று கணினித் தமிழ் வளர்ச்சிக்கு தனி துறை உருவாக பரிந்துரை செய்யப்படும் என்றும் நிதியும் இதற்க்கு அளிக்க அரசுக்கு பரிந்துரை செய்யப்படும் என்றும் அரசு அதிகாரிகள்  தெரிவித்தனர் . இதுவே மாநாட்டின் பெரும் வெற்றியாக பார்க்கப் படுகிறது . தமிழ் நாட்டில் உள்ள கடைகள் அனைத்தும் கட்டாய தமிழ் பெயர் பலகை வைக்க மறு ஆணை பிறப்பிக்கவும் தமிழ் வளர்ச்சி துறை இயக்குனர் சம்மதம் தெரிவித்தார் .





















[vuukle-powerbar-top]

Recent Post